ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்க பெருமாள் கோவில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 02:05
ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டி அருகே கதலிநரசிங்க பெருமாள் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி புகழ் பெற்றது. .இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று நடந்த கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று காலை கோவிலில் வாசாந்தி எடுக் கப்பட்டு, சக்கரத்தாழ்வார் கொடிப்பட்டம் வீதி உலா கொண்டுவரப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைகள் மற் றும் சம்பிரதாயங்கள் செய்யப் பட்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் நடத்தப் பட்டது.12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு வாகனங் களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வருகிற 10--ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 12-ந்தேதி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.