பதிவு செய்த நாள்
06
மே
2014
11:05
ராசிபுரம்: ராசிபுரம் இரட்டை பிள்ளையார் கோவிலில், மழை வேண்டி, ஜலவாச பூஜை நடந்தது. ராசிபுரம் கடைவீதி இரட்டை பிள்ளையார் கோவிலில், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள், மழை வேண்டி, பிள்ளையார் ஸ்வாமி சிலை முன்பு, நான்கு அடி உயரத்திற்கு சுவர் எழுப்பினர். பின்னர், அதில் பிள்ளையார் சிலைகள் மூழ்கும் வரை தண்ணீர் நிரப்பினர். தொடர்ந்து, பிள்ளையார் தெப்ப உற்சவத்தில் வைக்கப்பட்டு, ஜலவாச பூஜை செய்யப்பட்டது. அந்த, தெப்ப உற்சவம் வரும், 10ம் தேதி வரை இருக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடப்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து, தினமும் கட்டளைதாரர் சார்பில், காலை 8 மணி முதல், 9 மணி வரை பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும்.