கம்பம் : கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா, கடந்த 16 ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தவர்கள், மண்டகப்படி நடத்தி வருகின்றனர். விதவிதமான அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதி உலா வருகிறார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி கடந்த 30 ந் தேதி துவங்கி, தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்றது.பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதானம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.