பதிவு செய்த நாள்
07
மே
2014
12:05
திருவள்ளூர் : வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, கருட சேவை நேற்று நடந்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் புறப்பாடும், கோவில் வளாகத்தில் பத்தி உலாவும் நடக்கின்றன.விழாவின், 3வது நாளான நேற்று, கருட சேவை கோபுர தரிசனம் காலை, 4:00 மணிக்கும், புறப்பாடு காலை, 5:30 மணிக்கும் நடந்தன. வாண வேடிக்கைகளுடன், கேரள செண்டை மேளம் முழங்க, வீரராகவ பெருமாள் திருவீதி உலா வந்தார்.பின், உற்சவருக்கு மதியம், 3:30 மணிக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடும், நடந்தது. நிகழ்ச்சியில், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.