பதிவு செய்த நாள்
07
மே
2014
01:05
உடுமலை : அடிவள்ளி, தெக்கலுார் துர்க்கை அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. உடுமலை, பெதப்பம்பட்டி - பொள்ளாச்சி ரோடு, புதுப்பாளையம், அடிவள்ளி கிராமத்தில் உள்ள தெக்கலுார் துர்க்கை அம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் 22ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன. கடந்த 4ம் தேதி, அம்மனுக்கு தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. நேற்றிரவு சக்தி கும்பம் வைத்து, அம்மனை கும்பத்தில் எழுந்தருளச் செய்து, கோவிலுக்கு அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 5.00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, காலை 6.00 மணிக்கு, விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு, பூவோடு எடுத்துவரப்படுகிறது. காலை 10.00 மணிக்கு, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. நாளை காலை 10.00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது; மாலை 4.00 மணிக்கு அம்மனுக்கு மகா தீபாராதனை, பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.