பதிவு செய்த நாள்
07
மே
2014
01:05
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நடந்த, தமிழிசை மற்றும் தியாகராஜர் ஜெயந்தி விழாவில், இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. தியாகராஜ சுவாமி மகோற்சவ சபா மற்றும் சாரதா கலாமந்தீர் சார்பில், தமிழிசை விழா மற்றும் 39ம் ஆண்டு தியாகராஜ சுவாமிகள் ஜெயந்தி விழா, எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் நடந்தது. தமிழிசை விழா, கடந்த 2ம் தேதி, விநாயகர் பூஜை மற்றும் தியாகராஜர் ஆவாஹன பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை, வளரும் கலைஞர்கள் மற்றும் பல்வேறு இசைக்கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சிகள் நடந்தன. 3ம் தேதி, காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தொடர்ந்து நடந்த இசை நிகழ்ச்சியில் பல இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். கடந்த 4ம் தேதி, தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா துவங்கியது. இதில், புதுச்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள, பிரபலமான இசை கலைஞர்கள், இசை பயிலும் மாணவர்கள் பங்கேற்ற இசை நி கழ்ச்சி நடந்தது.நேற்று காலை, பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்று, பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர். அதைத்தொடர்ந்து, ஜோதிர்மயி குழவினரின் இசை நிகழ்ச்சி, மாணவர்கள், பிரசன்னா ஆதிசேஷா, மிராஅரபிந்த், கவுதம், அரவிந்த், கவுதமராஜா, சங்கரி, அரவிந்த் கவுசிக், மீரா, கீர்த்திலட்சுமி, வசுதாரினி, தாரிணி, ரிதிகா, பிரியதர்ஷினி, ஆர்த்தி, பூஜா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.