பதிவு செய்த நாள்
08
மே
2014
03:05
கடவுள் சந்நிதிக்குள் நுழைந்தாலே போதும், ஏம்ப்பா! பக்கத்து வீட்டு பரமசிவம் கோடி கோடியா வச்சிருக்கான். நான் அவ்வளவாடா உன்கிட்டே கேட்கிறேன். ஏதோ அஞ்சு லட்சம் பத்து லட்சம் கேக்கிறேன். தரமாட்டாங்கிறியே! அவன் காரிலே போறான், எனக்கு ஒரு பைக் தரக்கூடாதா! ஏ முருகா! கண்ணைத் தொறந்து பாருடா, என்று கதறுபவர்கள் பலர்!
ஒருத்தன் இப்படித்தான் கடவுளைப் பாடாய் படுத்தினான். ஒருநாள், கடவுளே அவன் முன்னால் வந்து விட்டார். என்னப்பா வேணும்னார். வேறென்ன கேக்கப்போறேன்! ஒரு முப்பது லட்சம், தங்க நகை, வைர வைடுரியங்கள் வேணும்னான். அவர் மூன்று தேங்காயைக் கொடுத்தார். என்ன சொல்லி உடைக்கிறாயோ, அது இதில் இருந்து வரும், என்றார். அவன் முப்பது லட்சம் வரட்டும் என்று சொல்ல வாயெடுத்த வேளையில், அவன் மனைவி வந்து என்னங்க! டீ போடட்டுமா! என்றாள். முக்கியமான வேலையா இருக்கேன்லே! உன் தலையிலே இடிவிழ என்றான். திடீரென மேகக்கூட்டம்...இடி இடித்தது. அவன் மனைவி தலையில் விழுந்து விட்டது. ஐயோ இறைவா! விளையாட்டா சொன்னது வினையாப் போச்சே! அவளுக்கு உயிர் பெற்று எழட்டும், என்று சொல்லியபடியே இன்னொரு தேங்காயை உடைத்தான். அவள் எழுந்தாள். ஆனால், இடி விழுந்ததில் முகம் விகாரமாகி விட்டது. இவளோடு எப்படி குடுத்தனம் நடத்துறது! பழைய முகம் திரும்பி வரட்டும், என்றான். அவளுக்கு முந்தைய முகம் கிடைத்தது. ஆக, முப்பது லட்சம் போச்சு! ஒருவருக்கு என்ன கிடைக்கிற வேண்டுமென இருக்கிறதோ, அதுதான் கிடைக்கும். கடவுள் கொடுத்திருக்கிற சவுகரியத்தோட வாழ கத்துக்கணும். அதுவே இனிய வாழ்வை தரும்.