தூத்துக்குடி: தூத்துக்குடி பாஞ்சலங்குறிச்சி கோட்டை பகுதியில், வீரபாண்டிய கட்டபொம்மனின் குல தெய்வமான வீரசக்கதேவி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் இரு நாட்கள் திருவிழா நடக்கும். இவ்விழா இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இதில் கட்டபொம்மன் வம்சாவாளியினர் பங்கேற்பர். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், திருவிழா வில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. விழாவில், கத்தி, சுருள் கத்தி, வேல்கம்பு போன்ற ஆயுதங்களுடன் வருவர். இம்முறை, ஆயுதங்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ""மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் நேற்று மாலை 6 மணி முதல் மே 10 மாலை 6 வரை "144 தடை அமலில் இருக்கும், என கலெக்டர் ரவிக்குமார் தெரிவித்தார்.