உத்தமபாளையம் : உத்தமபாளையம் தேரடியில் அமைந்துள்ள, விஸ்வகர்ம மகாஜன சங்கத்தார்க்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. முதல்நாளில் அம்மன் திருவிளக்கு பூஜை நடந்தது. இரண்டாம் நாளில் சக்தி கரகம் எடுத்து தெற்கு , வடக்கு, கிழக்கு ரதவீதிகளில் ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்றாம் நாள் காலையில் பொங்கல் வைத்தல், மாலையில் சக்தி கரகம் முளைப்பாரிகளுடன் புறப்பட்டு நான்கு ரத வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பெரியாற்றில் கரைக்கப்பட்டது. மாரியம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.