சென்னை: மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் மே 14-- ம் தேதி 1008 பால்குட விழா நடைபெறவுள்ளது.சித்ரா பெளர்ணமி முழுநிலவு தினத்தையொட்டி உலக நன்மைக்காக கோடை வெப்பம் தணியவும், நோய்கள் ஏதும் வராமல் மக்களை காக்கவும் பக்தர்கள் 1008 பால்குடங்களை சுமந்து வீதி வலம் வரவுள்ளனர். தொடர்ந்து மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெறவுள்ளது. மாலையில் அம்மன் வீதியுலாவும் நடைபெறவுள்ளது.