பதிவு செய்த நாள்
10
மே
2014
12:05
கீரிப்பட்டி: ஆத்தூர் அருகே உள்ள, கீரிப்பட்டியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஸ்வாமி கோவிலில், நாளை மறுநாள், மஹா கும்பாபிஷேகம் மற்றும், 12ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழா நடக்க உள்ளது. காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஸ்வாமிக்கு, மஹா கும்பாபிஹேகம், காலை, 7 மணியளவில் நடக்க உள்ளது. முன்னதாக, இன்று காலை, 10 மணிக்கு, யஜமான பூஜை போன்ற முதலான பூஜைகள் நடக்கவுள்ளது. அதை தொடர்ந்து, இரவு, 9 மணியளவில், பூர்வாங்கத்துடன் வாஸ்து சாந்தி மற்றும் மறுநாள் காலை, 10 மணியளவில், அஸ்வ பூஜை, கோ பூஜை நடக்கிறது. அதே நாள் இரவு, ஸ்வாமிக்கு பல விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, மறுநாள் (மே.,12) காலை மஹா கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. புதன் கிழமையன்று, சித்ரா பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஸ்வாமி திருவீதி உலா வருதல் நடக்கிறது.