பதிவு செய்த நாள்
10
மே
2014
12:05
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே உள்ள, கொண்டையம்பள்ளியில் அமைந்திருக்கும் விநாயகர், செல்லியம்மன், மாரியம்மன் மற்றும் சுப்ரமணியர் ஆகிய ஸ்வாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம், நாளை நடக்க உள்ளது. மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று காலை, 7 மணியளவில் மகா கணபதி ஹோமம் மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து, மண்டப பூஜை, கும்பலங்காரம் மற்றும் முதற்காலை பூஜை நடைபெறும். நாளை காலை, 6 மணியளவில், விநாயகர், மாரியம்மன், சுப்ரமணியர் கோவில்களுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, செல்லியம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.