பதிவு செய்த நாள்
13
மே
2014
09:05
பரந்த மனம் படைத்த ரிஷப ராசி அன்பர்களே!
இந்த மாதம் 6ல் இருக்கும் சனி, ராகுவால் நன்மை உண்டாகும். சுக்கிரன் மே 24 வரை உங்கள் ராசிக்கு 11ல் இருந்து நன்மை கொடுப்பார். 2ல் இருக்கும் குரு ஜூன் 13 வரை நற்பலன் கொடுப்பார். அதன்பின் 4ம் இடமான கடகத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. குரு 3 ல் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. குருவின் அனைத்து பார்வையால் பல நன்மை <<உண்டாகும். சூரியன்,புதன், செவ்வாய், கேது ஆகியோரால் எந்த பலனும் கிடைக்காது. வீண் விரயம் ஏற்படலாம். சிக்கனம் தேவை. புதன் சாதகமற்ற தன்மையால் வீட்டில் சில பிரச்னை வரலாம். சுக்கிரன் மே 24 வரை சாதகமான இடத்தில் இருப்பதால் பண வரவு இருக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.
தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் இடமாற்றத் திற்கு ஆளாவர். பணிச்சுமையும் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்க யோகமுண்டு. மே 24க்கு பிறகு எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்காது. அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. எதிர்பார்ப்பு இல்லாமல் உழைக்க வேண்டியதிருக்கும். கையில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். குருவின் பார்வையால் விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். விவசாயிகள் கால்நடை மூலம் நல்ல வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். பெண்கள் கணவர், குடும்பத்தாரின் அன்பை பெற்று மகிழ்வர். ஜூன் 2,3 ல் புத்தாடை, அணிகலன் வாங்க யோகமுண்டு. விருந்து விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்:மே15,16,21,22,23,24,25,28,29, ஜூன் 2,3,9,10, 11,12,13
கவன நாள்: மே 17,18, ஜூன் 14.
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: கறுப்பு, மஞ்சள்
பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வணங்குங்கள். பசுவுக்கு தழை போடுங்கள். சூரியனை தரிசித்தால் நிம்மதி கிடைக்கும். ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.