பதிவு செய்த நாள்
13
மே
2014
09:05
முன் யோசனையுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் 11ல் இருக்கும் கேதுவால் நற்பலன் தொடரும். சுக்கிரன் மே 24ல் 11-ம் இடமான மேஷத்திற்கு மாறி நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், நிதானத்தை பின்பற்றுவது நல்லது. அதே நேரம் குரு, உங்கள் ராசியை விட்டு ஜூன் 13 ல் 2-ம் இடத்திற்கு பெயர்வது நன்மை தரும். குருவின் ”பப்பார்வையால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். கடந்த காலத்தில் இருந்த மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பகைவர் சரணடையும் நிலை ஏற்படும். கேதுவால் காரிய வெற்றி ஏற்படும். ஆன்மிக ”ற்றுலா சென்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மே 24க்கு பிறகு பண வரவு கூடும்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். ஆனால், சில சமயத்தில் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்த படி இருக்காது. சூரியன், புதன் ராசிக்கு 12-ல் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படும். வெளியூர் பயணத்தால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க வாய்ப்பில்லை. எதிரியால் தொல்லை உருவாகும். முயற்சியில் தடை குறுக்கிடும். பணியாளர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிகாரிகளின் கருணை பார்வை தொடர்ந்து கிடைக்கும். கலைஞர்கள் நிலையான வருமானம் காண்பர். சுக்கிரனால் இருந்து வரும் அவப்பெயர் 24க்கு பிறகு மறையும். புதிய ஒப்பந்தம் கிடைக்க யோகமுண்டு. அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியது கட்டாயம் நேரும். மக்கள் நலப் பணிகளில் ஆர்வம் காட்டுவது நல்லது. மாணவர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பர். ஜூன்13க்கு பிறகு மேல் படிப்பில் சாதனை புரிவீர்கள். ஆசிரியர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். விவசாயிகளுக்கு கால்நடைவளர்ப்பில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். பெண்கள் கணவர், குடும்பத்தாரிடம் நற்பெயர் காண்பர். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். விரும்பிய வகையில் ஆடை, ஆபரணங்கள் சேரும்.
நல்ல நாள்: மே 15,16,17,18,24,25,26,27 ஜூன் 1,4,5,6,11,12,1 3,14
கவன நாள்: மே 19,20 சந்திராஷ்டமம் கவனம்
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்:சிவப்பு,வெள்ளை
பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துங்கள். சனியன்று காக்கைக்கு அன்னம் படைத்து வழிபடுங்கள். புதன் கிழமை குலதெய்வத்தை வணங்கி, ஏழைகளுக்கு பாசிபயறு தானம் செய்யுங்கள்.