கீழக்கரை : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் உள்ள பட்டாபிஷேக ராமர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பட்டாபிஷேக ராமர் கோயில் சித்திரை திருவிழா மே 5ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை, மாலை வேளையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். மே 8ல், பட்டாபிஷேக ராமர், ஆதிஜெகநாத பெருமாள் உபய கருட சேவை, மே 10ல், திருக்கல்யாணம் நடந்தது. நேற்று, காலை 10 மணிக்கு துவங்கிய தேரோட்டத்தை பக்தர்கள் வடம் பிடித்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தினர் செய்தனர்.