இன்று சிவராத்திரி. நரக சதுர்த்தசி; வீட்டில் எம தீபம் ஏற்றுங்க..! ஆண்டு முழுதும் நல்லது நடக்கும்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2025 08:10
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தடைகள் விலகும். தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பது வழக்கம். ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு முழுவதும் விழித்து நரகாசுரனுடன் போரிட்டு வென்றார் கிருஷ்ணர். இதனால் இந்நாளுக்கு ’நரக சதுர்த்தசி’ என்றும் பெயர். சிவராத்திரி சிவனுக்குரியது என்றாலும், ஐப்பசி பெருமாளுக்கு உரியதாக உள்ளது. கிருஷ்ணர், சிவன் இருவரையும் வழிபட ஏற்ற நாள் இது. வீட்டின் வெளியே அல்லது உயரமான பகுதியில் கிளியாஞ்சட்டியில் தீபம் ஏற்றப்பட வேண்டும். முன்னோரை மனதில் ஓரிரு நிமிடங்கள் நினைக்க வேண்டும். திரயோதசி திதியில் செய்யும் இந்த வழிபாடு வருடம் முழுவதும் நல்ல பலனை தரும். மாஹாளய பட்ச காலத்தில் பூலோகம் வரும் முன்னோர்கள் மாஹாளய அமாவாசையில் மீண்டும் திரும்பிச் செல்வதாக ஐதீகம். அவர்களுக்கு வெளிச்சம் காட்டுவது இந்த எம தீபம். இத்தீபம் ஏற்றுவதால் முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார் என்பது நம்பிக்கை. இதனால் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.