பதிவு செய்த நாள்
19
அக்
2025
08:10
நத்தம்: சிவன் கோயில்களில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது.இதையொட்டி நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி,சந்தனம்,இளநீர்,தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடும் நடந்தது. மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நத்தம் குட்டூர் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் மூலவர், நந்திக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
கன்னிவாடி: சோமலிங்க சுவாமி கோயிலில் மூலவர், ஓம்கார நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் பிரதோஷ அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
பழநி: பழநி முருகன் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி ,பாத விநாயகர் கோயில் அருகே உள்ள மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோவில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில், ராமநாதநகர் லட்சுமிநரசிம்மர் கோயிலில் ஐஸ்வர்ய லிங்கேஸ்வரர் சன்னதி உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம்: நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதுார் பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேகம், காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் அபிஷேகம், ஒட்டன்சத்திரம் ரத்தினகிரீஸ்வரர் கோயில், விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயிலில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது