காந்தாரா பட கதாநாயகன் : ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2025 08:10
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காந்தாரா பட கதாநாயகன் ரிசப் செட்டி சுவாமி தரிசனம் செய்தார்.
சினிமா திரையுலகில் சமீபத்தில் ரூ. 700 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்த காந்தாரா 2 திரைப்படத்தின் கதாநாயகன், இயக்குநருமான ரிஷப் செட்டி நேற்று இரவு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தார். இவரை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் முருகன் வரவேற்றனர். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் ரிஷப் செட்டி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். இவருக்கு கோயில் குருக்கள் பிரசாதம் வழங்கினர்.
பின் ரிஷப் செட்டி கூறியதாவது : காந்தாரா படத்திற்கு தமிழக மக்கள் மிகப் பெரும் வரவேற்பை கொடுத்தற்கு நன்றி கூறுகிறேன். கடவுளின் அருளால் இங்கு சுவாமி தரிசனம் செய்தது பெரும் பாக்கியம். இந்த வெற்றியின் மூலம் அடுத்த படம் பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. காந்தாரா படத்தின் வெற்றிக்காக அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி என்றார்.