விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியிலுள்ள பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் புணரமைக்க அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்கிரமாதித்த மன்னன் ஆண்ட ஊரான விக்கிரமாதித்த சதுர்வேதி மங்கலம் விக்கிரவாண்டி என அழைக்கப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் 68 ஆண்டுகளுக்கு முன்னர் 1946ம் ஆண்டு ஜூலை மாதம் 5 ம் தேதி குடமுழுக்கு செய்துள்ளனர். கருங்கற் கட்டடங்களுடனும் , பெரியமதில் சுவர்களுடன் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. இருந்தும் முறையான வருவாய் இல்லாமல் தற்போது கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில் புணரமைக்க இரு ஆண்டுகளுக்கு முன் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி முயற்சி எடுத்தார். மாற்று கட்சி எம். எல். ஏ., என்பதால் ஆளும் கட்சி ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததோடு சரி. கிடப்பில் போடப் பட்ட பணியை தமிழக அரசு கவனம் செலுத்தி நட வடிக்கை எடுத்து சிதில மடைந்து வரும் கோவிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .