புதுடில்லி : கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்திற்காக மத்திய அரசால் கடந்த 28 ஆண்டுகளில் ரூ.20,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் புனித நதியாக கருதப்படும் கங்கை இன்று வரை மாசுபட்ட நிலையிலேயே உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கங்கை கரையோரங்களில் வீடுகளும், பூங்காக்களும் அதிகளவில் உருவாக்கப்பட்டதால், கங்கை நதியில் கலக்கும் கழிவுநீரின் அளவும் அதிகரித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கங்கை நதியை சுத்தப்படுத்த ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகை ஒதுக்கப்பட்டு வருகிறது. 1986ம் ஆண்டு கங்கையை சுத்தப்படும் திட்டம் வகுக்கப்பட்டது.