பதிவு செய்த நாள்
14
மே
2014
02:05
கடம்பத்தூர்: கோவிலைச் சுற்றி, கரி சூளை அமைத்து, கரி தயாரிப்பதால், பக்தர்கள் கோவிலுக்கு வர முடியாமல் அவதிப்படுகின்றனர். கடம்பத்தூர் அடுத்துள்ளது, வெண்மனம்புதூர் கிராமம். இங்கு விடையூர் செல்லும் சாலையில், ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலைச் சுற்றி, இப்பகுதியைச் சேர்ந்தவர் கரி சூளை அமைத்து, விறகு கரி தயாரித்து வருகிறார். இதனால், கோவிலுக்கு வரும் பாதை முழுவதும், மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கரி தயாரிக்கும் போது ஏற்படும் புகையால், இப்பகுதிவாசிகளும், கடம்பத்தூர் – விடையூர் சாலையில் செல்லும், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த கரி சூளை, முறையான அனுமதி இல்லாமல் இயங்குவதாகவும், மேலும், இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுப்பதில்லை என, குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, கோவிலைச் சுற்றி இயங்கும் கரி சூளைக்கு, தடை விதிக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.