பதிவு செய்த நாள்
14
மே
2014
02:05
மண்ணச்சநல்லூர்: மண்ணை மகாசக்தி மாரியம்மன் கோவில், 29ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடந்தது. மண்ணச்சநல்லூர் சிவன் கோவில் அருகிலுள்ள மண்ணை மகாசக்தி மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 5ம் தேதி கணபதி ஹோமம், கோ பூஜை, முகூர்த்த கால் நடுதலுடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு, 11ம் தேதி காலை கொள்ளிடம் ஆற்றிலிருந்து பக்தர்களால் புனித நீர் கொண்டு வரப்பட்டு, விநாயகருக்கும், பூமிநாத ஸ்வாமிக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு குளுமை செய்தல், விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம், அம்மன் வீதியுலா வருதல், அன்னதானம் நடந்தது. மே, 12ம் தேதி கூழ் பூஜை, திருவிளக்கு பூஜையும், 13ம் தேதி நாதஸ்வர இசையுடன் ஊஞ்சல் உற்சவம், சுவாமி குடிவிடுதல், விடையாற்றி வைபவமும் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு அம்மன் காயத்ரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.