ஆலங்குடி: ஆலங்குடி அருகே, நெம்மக்கோட்டை சித்தி விநாயகர் கோவில் தேரோட்டம் நடந்தது. ஆலங்குடி அருகே, பிரசித்தி பெற்ற நெம்மக்கோட்டை சித்தி விநாயகர் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது. இதனையடுத்து, விநாயகர் பொற்பனை முனீஸ்வரர், சுப்பிரமணியர் ஸ்வாமிக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, 10ம் நாள் விழாவாக தேரோட்டம் நடந்தது. வாணவேடிக்கைகளுடன் அரோகரா கோஷம் முழங்க, பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.