கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் கம்பன் விழாவில் சற்குருநாத ஓதுவாரின் திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது. கண்டாச்சிபுரம் கம்பன் நற்றமிழ் கழக இலக்கிய விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. கோவை கம்பன் கழக செயலர் நஞ்சுண்டன் தலைமை தாங்கினர். தெய்வமணி வரவேற்றார். மாணவிகள் பவித்ரா, திருமங்கை, பிரீத்தி, புவனேஸ்வரி கலந்து கொண்ட கம்பன் கவியமுது நிகழ்ச்சி நடந்தது. திகப்பாடலும் பரிமளிக்கும் இறை உணர்வும் என்ற தலைப்பில் ஓதுவார் சற்குருநாதன் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடினார். கோமதி வாகீஸ்வரி இப்பாடல்களின் வரலாறு குறித்து விளக்கினார். கருணாகரன் நன்றி கூறினார்.