மாரியம்மன் கோவில் வளாகத்தில் சினிமா இசை நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2014 02:05
அன்னுார் : அன்னுார் மாரியம்மன் கோவில் 30ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு கோவில் வளாகத்தில் இசை கச்சேரி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இரவு 9.30 மணிக்கு இசை நிகழ்ச்சி துவங்கியது. முதலில் சில பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் காதல் குறித்த சினிமா பாடல்கள் பாடப்பட்டன. உடனே பக்தர்கள் அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து சினிமா ஆபாச பாடல்கள் பாடப்பட்டன.இதையடுத்து, பாரதிய ஜனதா மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் கோவில் வளாகத்திற்கு சென்று சினிமா பாட்டு பாடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து இசை நிகழ்ச்சி அத்துடன் ரத்து செய்யப்பட்டு இசைக்குழுவினர் திரும்பிச் சென்றனர். பொதுமக்களும் கலைந்து சென்றனர்.