பதிவு செய்த நாள்
14
மே
2014
02:05
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், இன்று சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, இன்று காலை 6.00 மணிக்கு, உடுமலை, நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, தீர்த்தம் மற்றும் பால் குடம் எடுத்து வரப்படுகிறது. காலை 6.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் விசாலாட்சி அம்மனுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை மற்றும் மகா தீபாராதனை இடம்பெறுகிறது. காலை 10.00 மணிக்கு மேல், திருக்கல்யாண சீர் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன், விசாலாட்சி அம்மனுக்கும் விஸ்வநாதர் சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு, விசேஷ பூஜை, அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் அன்னதானமும், மாலை 6.30 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடக்கின்றன.