பதிவு செய்த நாள்
14
மே
2014
03:05
ராஜபாளையம் : சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, ராஜபாளையம் ஆவரம்பட்டி சோலைமலை பெருமாள்சுவாமியின் புறப்பாடு, நேற்று இரவு, கருடவாகனத்தில் கோயிலில் இருந்து துவங்கியது. தென்காசி ரோடு, காந்தி சிலை, பண்ணையார் ஆர்ச் பெரியகடை பஜார், காமராஜர் நகர், டி.பி.மில்ஸ் ரோடு வழியாக வந்த சுவாமி, மலையடிப்பட்டி பாலர் பள்ளியில் வீற்றிருந்தார். அங்கிருந்து, இன்று காலை 7.45 மணிக்கு, ரயில்வே பீடர் ரோடு நாடார் மேல்நிலை பள்ளியில் எழுந்தருள்கிறார். இரவு, இன்னிசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. மே 15ல் நாடார் தெரு மண்டகப்படியில் எழுந்தருளி, காலை 10 மணிக்கு சுவாமி கோயில் செல்கிறார். ஏற்பாடுகளை, ராஜபாளையம் கிருஷ்ணமராஜபாளையம் நாடார் உறவின்முறை மகமை பண்டு நிர்வாகிகள் செய்து உள்ளனர்.