பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா மே 9 ல், காப்புக் கட்டுடன் துவங்கியது. நேற்று, காலை பெருமாள் கோயில் யாகசாலை மண்டபத்தில் இருந்து, புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகியது. தொடர்ந்து பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து, சந்தனக்குடம், இளநீர் காவடி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். பின்னர், மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜப் பெருமாள், காவல் தெய்வம் கருப்பண்ணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.காலை முதல் இரவு வரை பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். விழாவையொட்டி கோயில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.