பழநி : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலிருந்து காலை 8 மணிக்குமேல், 108 பால்குடங்கள் திருஆவினன்குடி கோயிலுக்கு எடுத்துவந்து. மூலவர் குழந்தை வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 8 மணிக்குமேல், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன், வெள்ளிரதத்தில், நான்குரதவீதிகளில் பவணி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்தவிலாஸ் செல்வக்குமார் உட்பட முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணைஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா செய்திருந்தனர்.