வெள்ளை குதிரையில்.. மானாமதுரை வைகையில் இறங்கிய வீர அழகர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2014 11:05
மானாமதுரை : மானாமதுரையில் சித்திரை திருவிழா ஆனந்தவல்லி சோமநாத சுவாமி கோயிலில் கடந்த 2 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது .விழா நாட்களில் ஆனந்தவல்லி,சோமநாத சுவாமி பல்வேறு வாகனங்களில் வலம் வந்தனர்.கடந்த 10ம் தேதி காலை 11 மணிக்கு ஆனந்தவல்லிக்கும்,சோமநாத சுவாமிக்கும் பிரியாவிடையுடன் திருக்கல்யாணம் நடந்தது.நேற்று இரவு வீர கள்ளழகர் கோயிலில் கொம்புகாரனேந்தல் மண்டகபடியில் சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கு நடைபெற்றது.இதை தொடர்ந்து 18ம் படி கருப்பணசாமி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்று அங்கிருந்து கருப்பணசாமியிடம் விடை பெற்று பெருமாள் கோயிலில் தங்கினார்.நேற்று காலை 8 மணிக்கு பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு ஒவ்வொரு மண்டகப்படியாக சென்று தல்லாக்குளம் முனியாண்டி கோயிலுக்கு சென்ற வீர அழகர் வெள்ளை குதிரையில் பச்சை பட்டு உடுத்தி காலை 10.45 மணிக்கு வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா என்று முழங்கியவாறு வீர அழகரை தரிசித்தனர்.