ஆரணி : ஆரணியை அடுத்த சேவூர் மதுரா ரகுநாதபுரம் கிராமத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் வீட்டில் கூழ் வைத்து படையல் செய்து பின்னர் கோயிலில் உள்ள கொப்பரையில் ஊற்றி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றன. பின்னர், கோயிலில் நேற்று பொங்கல் வைத்து படையல் செய்தனர்.