புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று தெப்பல் திருவிழா நடந்தது. கோவில் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு உற்சவங்கள் நடந்து வந்தது. நேற்று இரவு 7:00 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழாவும், 9.00 மணியளவில் தெப்பல் திருவிழாவும் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.