புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலி சார்பில், உலக அமைதி வேண்டி, உபன்யாச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேரு வீதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து, காலை 5:30 மணிக்கு, மேள தாளத்துடன் பஜனை புறப்பட்டு, ஜெயராம் திருமண மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு நடந்த உபன்யாச நிகழ்ச்சிக்கு, லட்சுமி விஷ்ணு சஹஸ்ர நாம மண்டலி தலைவர் ராஜாராமன் வரவேற்றார். நிறுவனர் ஜனார்த்தன ராமானுஜதாசன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன் தலைமையுரையாற்றினார். காலை 9:30 மணிக்கு, உ.வே. துஷ்யந்த்ஸ்ரீதர் பங்கேற்று, ‘ஆயிரம் ஆயிரம்’ என்ற தலைப்பில் உபன்யாசம் நடத்தினார். பெங்களுரூ இஸ்கான் இயக்குனர் பிரபு பங்கேற்று, விஷ்ணு சஹஸ்ரநாம ஜபத்தை துவக்கி வைத்தார். உ.வே. அனந்த பத்பநாபாச்சாரியார் பங்கேற்று, விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ராமாயணம் என்ற தலைப்பில் உபன்யாசம் நடத்தினார். முத்தியால்ராமாநுஜதாசன் நன்றி கூறினார்.