சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறப்பு, இறப்பு இல்லை. ஆனால் பிரம்மனுக்கு உண்டு. படைப்புக் கடவுளான இவரை சில கோடி வருடங்களுக்குப் பிறகு சிவனும் விஷ்ணுவும் அழித்து விடுவர். புதிய பிரம்மா உருவாக்கப்படுவார். இவ்வாறு அழிக்கப்பட்ட ஒரு பிரம்மாவின் சமாதி திருவெண்காட்டில் புதன் சன்னதிக்கு வடபுறத்தில் உள்ளது.