தேரழந்தூர் ஆமருவியப்பன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2014 03:05
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழந்தூர் கிராமத்தில் செங்கமலவல்லி நாயிகா சமேத தேவாதிராஜன் என்கிற ஆமருவியப்பன் பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இங்கு திருமங்கையாழ்வார் மங்ளாசாசனம் செய்து 40 பாசுரங்களை பாடியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த தேரழந்தூர் ஆமருவியப்பன் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஜுன் மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோத்ஸவத்தின் 9ம் நாள் திருவிழாவான தேர் திருவிழா இன்று நடந்தது. இதனையொட்டி காலை தாயார் மற்றும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பெருமாள், தாயாருடன் தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பத்ராசலம், தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். குத்தாலம் போலீஸ் மற்றும் தீயனைப்பு மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.