தில்லைக்காளியம்மனுக்கு காப்புக் கட்டி வைகாசி பெருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2014 11:05
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு காப்புக்கட்டும் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர். பிரசித்திப் பெற்ற சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் வைகாசிப் பெருவிழா 19ம் தேதி துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தில்லைக் காளியம்மனுக்கு காப்புக்கட்டி உற்சவம் துவங்கியது. இதனைöயொட்டி நேற்று முன்தினம் மாலை தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காப்புக்கட்டும் உற்சவத்தையொட்டி சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் கோவில் பூசாரிகள், தில்லைக்காளியம்மன் வலது கையில் காப்புக்கட்டினார்கள். அப்போது பக்தர்கள் பயப்பக்தியுடன் அம்மன் தரிசனம் செய்தனர். பின்னர் அம்மன் புறப்பாடு நடந்தது. இதில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வைகாசி பெருவிழாவையொட்டி தில்லைக்காளியம்மனுக்கு தினம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செய்யப்பட்டு, அம்மன் புறப்பாடு நடக்கிறது. 5ம் நாள் உற்சவமான தெருவடைச்சான், 9ம் நாள் உற்சவமான திருத்தேர், 10ம் நாள் தில்லைக்காளி அம்மன் சிவப்பிரயை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி <உற்சவம் போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோர் செய்கிறார்கள்.