பதிவு செய்த நாள்
21
மே
2014
10:05
திண்டிவனம்: திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 12 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் வீதியுலா வந்து அருள் பாலித்தார். 14ம் தேதி காலை மற்றும் 16 ம் தேதி மாலையும் கருடசேவை உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் (19 ம் தேதி) மாலை திருக்கல்யாணம் நடந்தது. திருமண கோலத்தில் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நேற்று காலை 8.15 மணிக்கு, தேரோட்டத்தை முன்னாள் அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார். ராதாகிருஷ்ணன், நகரமன்ற சேர்மன் வெங்கடேசன், பி.ஆர்.எஸ்.ரங்கமன்னார், ராம் டெக்ஸ் தியாகராஜன், வெங்கடேசன்,முன்னாள் கவுன்சிலர் சக்தி வேல்,நியூ பால்பாண்டியன் சுரேஷ், ராஜன் டிரைவிங் ஸ்கூல் கோவிந்தராஜீ, ஆர்.டி.ஓ., ஜெயச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் , ராம்லால் ரமேஷ், டாக்டர் சண்முக சுந்தரம், அறநிலைய துறை செயல் அலுவலர் மகாரா ஜன், ஆய்வாளர் சுரேஷ், சங்கர் பங்கேற்றனர். பூஜைகளை சீனுவாசன், ரகு, ஸ்ரீதர் பட்டாச்சாரியர்கள் குழுவினர் செய்தனர். நண்பகல் 12.45 மணிக்கு தேர்நி லையை அடைந்தது.