பதிவு செய்த நாள்
23
மே
2014
12:05
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, கோவில் பூட்டை உடைத்து சுவாமி சிலை மற்றும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் கிராமத்தில் மிக பழமையான ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது.அந்த கோவிலில், கடந்த, 20ம் தேதி காலை 10:00 மணிக்கு, வழிபாடு முடிந்து கோவிலை பூட்டி விட்டு அர்ச்சகர் சென்றுள்ளார்.பின், மாலை 5:00 மணிக்கு கோவிலை திறக்க அர்ச்சகர் வந்தபோது, கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அர்த்த மண்டபத்தில் இருந்த பிரதோஷ நாதர் உற்சவர் சிலை, திருடுபோனது தெரிய வந்தது.மேலும், இரண்டு குத்து விளக்குகள், ஒரு பித்தளை தட்டு உள்ளிட்ட பொருட்களும் திருடு போயுள்ளன.இதுகுறித்து, கோவிலின் தர்மகர்த்தா சுந்தரம் அளித்த புகாரையடுத்து, காஞ்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.