பதிவு செய்த நாள்
23
மே
2014
12:05
இளையான்குடி : சாலைக்கிராமம் அருகே உள்ள சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இக்கோயிலில், மே 16 அன்று காப்புகட்டுதலுடன் திருவிழா துவங்கியது. மே 22ல் பூத்தட்டு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு, சாத்தமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து, பால்காவடி, ரதக்காவடி, பறவைக்காவடி, மயில்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வருவர். கோயில் முன் அமைத்துள்ள பூக்குழியில் இறங்கி, பக்தர்கள் நேர்த்தி செலுத்துகின்றனர். இன்று பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு மகா உற்சவம், கலை நிகழ்ச்சி நடை பெறும். நாளை (மே 24) காலை 5 மணிக்கு, பக்தர்கள் கிடாவெட்டி நேர்த்தி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை, கோவில் டிரஸ்டி எம்.கருப்பத்தேவர், தி.மு.க., சென்னை கே.கே., நகர் பகுதி செயலாளர் தனசேகரன் தலைமையில், கோயில் நிர்வாகஸ்தர்கள் செய்து வருகின்றனர்.