Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பழனி உண்டியல் காணிக்கை ரூ. 74 லட்சம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்றைய ராசிபலன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மே
2014
01:05

மேஷம்: இன்று, உங்கள் செயல்களில் ஞாபகமறதி வந்துவிலகும். பணிகளை திறம்பட செய்வதால், குறைபாடு வராமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். அளவான பணவரவும், புதிய இனங்களில் பணச்செலவும் ஏற்படும். பிறர் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

ரிஷபம்: இன்று, நண்பர், உறவினர்களிடம் அதிக அன்பு பாராட்டுவீர்கள். அறிமுகமான பெண்ணால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க, கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை சிறந்து லாப விகிதம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.              

மிதுனம்: இன்று, உங்கள் குடும்ப உறுப்பினர்கள், பெருமைப்படும் விதத்தில் செயல் புரிவீர்கள். மனதில் இருந்த வெகு நாள் சஞ்சலம் விலகும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். எதிர்கால தேவைக்கு, கொஞ்சம் பணம் சேமிப்பீர்கள்.

கடகம்: இன்று, உங்களுக்கு சிலர் இடையூறு செய்ய முயற்சிப்பர். தற்காப்புடன் செயல்படுவதால், பணி இலக்கு ஓரளவு நிறைவேறும். தொழில், வியாபார நடைமுறை சிறப்பு பெற, கூடுதல் உழைப்பு உதவும். பணவரவுக்கு தகுந்தபடி செலவுகளை மேற்கொள்வது நல்லது. தாயின் ஆறுதல் வார்த்தை, புதிய நம்பிக்கையை உருவாக்கும்.

சிம்மம்: இன்று, உங்களிடம் மாறுபட்டு பேசுபவரிடம் விலகுவதால், நன்மை பெறலாம். நண்பரிடம், எதிர்பார்த்த உதவி சிறிதளவு கிடைக்கும். தொழில், வியாபாரம் சீர்பெற, சில நடைமுறை மாற்றம் பின்பற்றுவது அவசியம். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி, தரம் குறைந்த பொருளை அதிக விலை கொடுத்து வாங்குகிற நிலை ஏற்படலாம்.

கன்னி: இன்று, மனதில் உற்சாகமும், செயல்களில் நேர்த்தியும் அதிகரிக்கும். நிலுவைப்பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். நீண்டநாள் பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். ஊட்டம் தரும் உணவு வகை உண்பதால், உடல் நல ஆரோக்கியம் பலம் பெறும்.

துலாம்: இன்று, உங்களின் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். துவங்குகிற புதிய செயல்களில், அதிக நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூலகாரணி பலம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: இன்று, சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். பெருந்தன்மையுடன் நடந்து கவுரவத்தை பாதுகாத்திடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை உருவாகும். நிலுவைப்பணம் வசூலிப்பதில், நிதான அணுகுமுறை நற்பலன் பெற உதவும். மாமன், மைத்துனர் இயன்ற அளவில் உத வுவர்.

தனுசு: இன்று, உங்களை நண்பர், உறவினர் புகழ்ந்து பேச வேண்டும் என, விரும்புவீர்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரும். குறைந்த அளவில், பணவரவு இருக்கும். அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். வாகன பயணத்தில், மித வேகம் பின்பற்றுவது நல்லது.

மகரம்: இன்று, இனிய நினைவுகளால், மனதில் உற்சாகம் வளரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. தாராள பணவரவில், எதிர்கால தேவைக்கு கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசுப்பணியாளர் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெற அனுகூலம் உண்டு.

கும்பம்: இன்று, தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். இல்லறத்துணையின் ஆலோசனை நல்வழியில் செயல்பட உதவும். தொழில், வியாபாரத்தில் உள்ள மந்தநிலையை, ஓரளவு சரி செய்வீர்கள். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு சீரான ஓய்வு அவசியம்.

மீனம்: இன்று, பொது விஷயங்களை அறிந்து கொள்வதில், அதிக ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் அன்பும், உதவியும் உங்களை உற்சாகப்படுத்தும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழித்து புதிய சாதனை இலக்கை அடைவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். மாணவர்கள் படிப்பில் நல்ல தர தேர்ச்சி பெறுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar