புதுச்சத்திரம்: வில்லியநல்லூர் சிலம்பியம்மன் கோவில் திருவிழா நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூரில் பிரசித்தி பெற்ற சிலம்பியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி மாத உற்சவம் நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இன்று 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை இரவு 10.00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 31ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு, ஜூன் 1ம் தேதி இரவு வாண வேடிக்கை, 2ம் தேதி காலை 5.00 மணிக்கு அம்மன் வீதியுலா, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. உற்சவ ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.