வில்லியநல்லூர் சிலம்பியம்மன் கோவிலில் உற்சவத் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2014 01:05
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூரில் பிரசித்திபெற்ற சிலம்பியம்மன் கோவில் உள்ளது. இதில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் உற்சவத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு உற்சவத் திருவிழா நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 26 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை இரவு 10.00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 31 ம் தேதி இரவு முத்துப் பல்லக்கு, ஜூன் 1 ம் தேதி இரவு வானவேடிக்கையும், 2ம் தேதி காலை 5 மணிக்கு அம்மன் வீதியுலா, மஞ்சள் நீர் விளையாட்டு நடக்கிறது. விழாவையொட்டி ஜூன் 1, 2 ம் தேதி இரவு நாடகம் நடக்கிறது. உற்சவ ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.