பதிவு செய்த நாள்
27
மே
2014
12:05
ராமநாதபுரம் : பிரதமராக மோடி பதவியேற்றதை முன்னிட்டு பா.ஜ.,வினர் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தினர். ராமநாதபுரம் அருகே இளமனூர் தர்மதாவள விநாயகர் கோயிலில் கிராம மக்கள், பா.ஜ., வினர் பொங்கலிட்டு ஆட்சி சிறக்கவேண்டி சிறப்பு பூஜை செய்தனர். கிராமத் தலைவர் நம்புராஜன், பா.ஜ., நிர்வாகிகள் நாகராஜன், சுந்தரபாண்டி, சூர்யபிரகாஷ், பழனிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகர் பா.ஜ.,வினர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். நகரின் முக்கிய இடங்களில் வெற்றி ஊர்வலம் சென்றனர். நகர் தலைவர் சூர்யபிரகாஷ், மாநில மீனவரணி அமைப்பாளர் காந்தி, மாவட்ட செயலாளர் குமார், நகர் பொதுச்செயலாளர்கள் ஜெகன் பிரகாஷ், அர்ஜூன், நகர் செயலாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் பாரதி நகரில் மெகா திரையில் மோடி பதவியேற்பு விழா பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆத்மா கார்த்திக், ஒன்றிய இளைஞரணி தலைவர்கள் செந்தில்குமார்(ராமநாதபுரம்), (மண்டபம்) பாலமுரளி செய்தனர்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், பா.ஜ.க., சார்பில் 108 கலச சிறப்பு பூஜை நடந்தது. தேசிய பொது குழு உறுப்பினர் முரளீதரன், குப்புராமு, நகர் தலைவர் முத்துசெல்வம், நிர்வாகிகள் சுந்தரம், நாகேந்திரன், ராமச்சந்திரன் பலர் பங்கேற்றனர். இந்து முன்னணி யாகம்: ராமேஸ்வரத்தில் அபாய ஆஞ்சநேயர் கோயிலில், ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில், "சுதர்சன் யாக பூஜை நடந்தது. நகர் தலைவர் மாரியப்பன், நகர் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி தட்சிணாமூர்த்தி பலர் பங்கேற்றனர்.