பதிவு செய்த நாள்
29
மே
2014
12:05
சென்னை: நங்கநல்லூரில் உள்ள, திருமாடக் கோவிலில், ஒரு கோடி எண்ணிக்கையில், புருஷ சூக்த பாராயணம், கடந்த 2011, ஜூன், 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை, 32 லட்சம் ஆவர்த்திகள் முடிந்து விட்டன. இந்த நிலையில், ஒரு லட்சம் ஆவர்த்திகளை முடித்து தருவதாக, கொட்டிவாக்கம், அப்பய தீட்சித் பவுன்டேஷன் ஏற்றுக் கொண்டு, வரும் ஜூன், 1ம் தேதி முதல், தினமும் காலை, 8:00 மணி முதல், 12:30 மணி வரை, ஒரு குழுவாக, புருஷ சூக்த பாராயணம் செய்ய இசைந்துள்ளனர். புருஷ சூக்தம் தெரிந்தோர், தனிப்பட்ட நபராகவோ, குழுவாகவோ இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 97910 19450, 94456 55536, 94452 62733 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.