ஆலங்குடி குரு கோவிலில் ஜூன் 13 ல் குரு பெயர்ச்சி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2014 02:05
திருவாரூர்: ஆலங்குடி, குரு பகவான் கோவிலில், ஜூன் 13ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, குருபகவான் சன்னதியில், ஜூன் 13ம் தேதி குருபெயர்ச்சி விழா நடக்கிறது. அதையொட்டி, கோவிலில் இரு கட்டங்களாக குருபகவானுக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக நேற்று துவங்கியது. ஜூன் 5ம்தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்டமாக ஜூன் 16ம் துவங்கி, 22ம் தேதி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனையில் பரிகாரம் செய்ய விரும்புவோர், 400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். விபரங்களுக்கு கோவில் செயல் அலுவலர் சிவராம்குமாரை, 95245 19922 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.