மயிலம்: கூட்டேரிப்பட்டு பள்ளிகொண்ட பெருமாள் கரிகோல நிகழ்ச்சி நடந்தது. கூட்டேரிப்பட்டு பி.டி.ஒ., அலுவலகம் எதிரில் ரங்கநாயகி சமேத பள்ளி கொண்ட பெருமாள் கோவில் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. புதியதாக வடிவமைக்கப்பட்ட பள்ளி கொண்ட பெருமாள் சிலை மயிலம் ஒன்றியத்தில் முக்கிய கிராமங்களுக்கும், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், செஞ்சி, மரக்காணம், திண்டிவனம், வீராம்பட்டினம் போன்ற ஊர்களுக்கும் கரிக்கோல நிகழ்ச்சிக்காக கொண்டு சென்றனர். வரும் 2ம் தேதி அதிகாலை 4.30 மூலவர் பள்ளி கொண்ட பெருமாள் கோவிலில் ஸ்தாபனம் செய்யப் படுகிறது. காலை 5.30 மணிக்கு பிறகு கொடிபந்தனம் சாற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளைக் குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.