வேடசந்தூர் : குட்டம் கரட்டுப்பட்டியில், மாரியம்மன் கோயில் விழா நடந்தது. சுவாமி சாட்டுதலுடன் தொடங்கிய விழாவில் ஊர் எல்லையிலிருந்து அம்மன் கரகம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். கண் திறப்பு வைபவம் நடந்தது. பொங்கல் , மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து மக்கள் வழிபட்டனர். மஞ்சள் நீராட்டுடன் கோயில் கிணற்றில் கரகம் விடப்பட்டது. ஏற்பாட் டை ஊர்க்கவுண்டர் கண்ணுச்சாமி, ஊர் பெரியதனம் கலையண்பன், ஆன ந்த், பரமசாமி, பழனிச்சாமி, கந்தசாமி செய்திருந்தனர்.