பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
12:06
கரூர்: கரூர், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று (2ம் தேதி) நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் அனுக்ஞை, தனபூஜை, ஆச்சார்யவரணம், ரக்ஷாபந்தனம், அங்குரார்பணம், வாஸ்துசாந்தி போன்றவை நடந்தது. தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து, ஆயிரக் கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்தும் வரும் நிகழ்ச்சி நடந்தது. கொடுமுடியில் இருந்து வாகனம் மூலம் தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. கரூர் முனியப்பன் கோவில் பிரிவு சாலையில் இருந்து, ஈரோடு சாலை, பஸ் ஸ்டாண்ட், வெங்கமேடு வழியாக வாங்கபாளையம் வரை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரை, மாடுகள் அழைத்து செல்லப்பட்டன. தொடர்ந்து யாக கால பூஜைகள் நடந்தது.
இன்று அதிகாலை, 3.30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை, அதிகாலை, 4 மணிக்கு சிறப்பு ஹோமம், ஸ்பர்சாகுதி, யாத்ராதானம் நடைபெற்றது.தொடர்ந்து, காலை, 6.45 மணிக்கு புது காளியம்மன், புது சங்கிலிகருப்பண்ணசாமி, புதுமாரியம்மன் ஸ்வாமி மற்றும் சகல பரிவார மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.காலை, 7.20 மணிக்கு மஹா அபிஷேகமும், 9.15 மணிக்கு மஹா தீபாராதனையும் நடைபெற்றது.