பிரசித்தி பெற்ற பவளமலை முத்துக்குமார சுவாமி கோவிலில் வரும் 19ம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதில், மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய பரிகார ராசிகளுக்கு பரிகார சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, 19ம் தேதி காலை 6 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம், பகல் 11 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு பரிகார அர்ச்சனை, பகல் 12.30 க்கு தீபாராதனை நடைபெறுகிறது.