பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
02:06
சிதம்பரம்: ஏ.மண்டபம் கிராமத்தில் நடந்த கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் அடுத்த ஏ.மண்டபம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள செல்வவிநாயகர், கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் புதிப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதனையொட்டி கடந்த 30ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கி அனுக்ஞை, வாஸ்து சாந்தி மற்றும் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு முதல் காலம் யாகசாலை பூஜையும் 31ம் தேதி காலை 2ம் காலமும், மாலை 7 மணிக்கு 3ம் காலம் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூர்ணாகிதி, மகா தீபாராதனைகள் நடந்தது.
நேற்று காலை 6 மணிக்கு சபரிசாகி, நாடி சந்தானம், கோ பூஜை போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா பூர்ணாகிதி, மகா தீபாராதனை நடைப்பெற்று கடம் புறப்பாடு செய்து காலை 9 மணிக்கு கோவில் விமானம், 9.30 மணிக்கு செல்வவிநாயகர் மற்றும் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி மூலஸ்தான கோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் புவனகிரி, முட்லூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தது. மகா கும்பாபிஷேகம் சிதம்பரம் சம்மந்த தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் குழுக்கள் செய்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழு மற்றும் கிராமவாசிகள் செய்தனர்.